தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..!

Tamils Mannar Sri Lanka LTTE Leader Buddhism
By Theepachelvan Nov 19, 2023 07:30 AM GMT
Report
Courtesy: - தீபச்செல்வன் -

ஒவ்வொரு தேசங்களிலும் சமூகங்களிலும் இறைவழிபாடு என்பது ஒரு ஆற்றுப்படுத்தலாகவும் பண்பாடாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

மனித வாழ்வில் சமயங்களின் வகிபாகம் என்பது வாழ்வியல் சார்ந்த நெறியாகும். இலங்கைத் தீவில் இன மேலாதிக்கமும் இன ஒடுக்குமுறையும் சமயங்கள் மீதும் சமயங்களை ஆயுதமாகக் கொண்டும் முன்னெடுக்கப்படுகிறது.

பெரும்பான்மையின மதமான பௌத்த சமயத்தை கொண்டு சிறுபான்மை இனங்களின் வழிபாட்டு உரிமைகள் மீது பாரிய ஆக்கிரமிப்புக்களும் ஒடுக்கு முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இதன் உச்சமாக தெய்வங்கள்மீதும் இனப்படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன என்ற கசப்பான அனுபவங்களை ஈழத் தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

தெய்வங்கள் மீதும் போர்

கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் பெரும் இனவழிப்புப் போர்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் ஈழத் தமிழ் மக்களின் தெய்வங்கள்மீதும் அந்தப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலயங்கள்மீது குண்டுதாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஆலயங்கள்மீது விமானத்தாக்குதல்கள் பலவும் நடாத்தப்பட்டுள்ளன.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

ஈழத் தமிழ் மக்களுடன் அவர்களின் தெய்வங்களும் குண்டுத் தாக்குதல்களில் பலியாகவும் காயமடைந்தும் போன கதைகளை நாம் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களின் வீடுகள் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டதுபோல ஆலயங்களின் கூரைகளும் சல்லடையாக்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் கை, கால்களை இழந்ததுபோல தெய்வங்களின் அங்கங்களும் போரில் பறிக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

நவாலி சென்பீற்றர் தேவாலயம், நந்தாவில் அம்மன் கோயில், மடுமாதா தேவாலயம் என்பன அரச படைகளின் போர்த் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆலயங்கள் ஆகும்.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

இங்கு மக்கள் தஞ்சமடைந்துள்ளார்கள் என்பது தெரிந்தும் போரை தவிர்க்க வேண்டிய ஆலயங்கள்மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் இந்த ஆலயங்கள் நனைந்துபோயுள்ளன.

நந்தாவில் அம்மன் ஆலயத்தில் ஈழத் தமிழ் மக்களின் சிதறிய உடல்கள் காணப்பட்ட காட்சிகளை இன்றளவும் மறந்துவிட முடியாது.

மடுதேவாலயத்தில் கொல்லப்பட்ட சடலங்களை வைத்து குளறி அழும் ஈழச் சனங்களை இன்றளவும் மறந்துவிட முடியாது.

மடு எனும் வடு

நம் நாட்காட்டிகள் ஈழச் சனங்களின் குருதியால் எழுதப்பட்டவை. நாள் தோறும் ஏதோவொரு படுகொலை நினைவில் வந்து விழுகிறது.

நவம்பர் 20 மன்னார் மடு தேவாலயப்படுகொலை இடம்பெற்ற நாள். சிங்கள மக்களிலும் கணிசமான கிறீஸ்வர்கள் இருக்கிறார்கள்.

அவர்களும் வணங்குகின்ற தேவாலயமாக மடு தேவாலயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆனாலும்கூட இனப்படுகொலை என்று வந்துவிட்டால் எந்த தெய்வத்தையும் படுகொலை செய்ய இலங்கை அரசும் அதன் படைகளும் துணியும் என்பதற்கு சாட்சியாக மன்னார் மடுதேவாலயப் படுகொலைகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

மன்னார் மக்களின் வாழ்வில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழ மக்களின் வாழ்விலும் தீருாத வடுவாக மடுத் தேவாலயப்படுகொலை பதிவாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடுப் பிரதேசம் கிறீஸ்தவப் பண்பாடு பரவியிருக்கும் பகுதி. இலங்கையில் மாத்திரமின்றி உலக அளவிலும் பிரசித்தமானது மன்னார் மடு தேவாலயம். அத்துடன் ஈழத்தைப் பொறுத்தவரையில் கிறீஸ்தவர்கள் மாத்திரமின்றி சைவர்களும் நம்பிக்கையுடன் வணங்கும் ஆலயமாக மடு தேவாலயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

அத்துடன் பௌத்தர்களும்கூட பெருமளவில் இந்த ஆலயத்தில் நம்பிக்கை கொண்டு வணங்குகின்றனர். வரலாறு முழுவதும் இந்த ஆலயம் போர் நடவடிக்கையின் பாதிப்புக்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வந்திருக்கிறது.

அடைக்கல மாதாவிடம் அடைக்கலம் புகுந்த மக்களுடன் மாதாமீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதா மீது தொடுத்த போர்

1990ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தில் இலங்கை அரச படைகளின் போர் நடவடிக்கை காரணமாக மடுப் பிரதேசத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.

1996களில் வடக்கில் சூழ்ந்த இனவழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் மடு வரையில் துரத்தியடிக்கப்பட்டனர்.

இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் என பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் மடு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

மடு தேவாலயச் சூழலே ஒரு அகதிகள் முகாம் போலக் காட்சி அளித்த காலம் அதுவாயிருந்தது.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

போரால் நலிவுற்ற மக்கள் மாதாவின் நிழலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். இந்த நிலையில், மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கிய இலங்கை அரச படை. ஆனபோதும் அப் போருக்கு அன்றைய மன்னார் ஆயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

புனித தலமான மடு தேவாலயம்மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு அன்றைய அதிபர் சந்திரிக்காவுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார் ஆயர்.

அக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அன்றைய அதிபர் சந்திரிக்கா மடுவை கைப்பற்றும் போரை தொடர்ந்து நடத்தி முடிப்பதில் கடும் தீவிரம் காட்டினார்.

மாதா மீது போர் தொடுக்கப்பட்டது.

நிர்க்கதியான மாதா

பல்லின மக்களும் வணங்கும் மாதா தம்மை காப்பாற்றுவாள் என்று நம்பி தமிழ் மக்கள் மாதாவின் ஆலயச் சூழலில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

1999ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதியன்று, மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக மேற்கொண்டனர் இலங்கை அரச படைகள். பாலம்பிட்டி - சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது இலங்கை இராணுவம்.

இப் போர் நடவடிக்கை காரணமாக பாலம்பிட்டி, தட்சணாமருதமடுப் பகுதி மக்களும் இடம் பெயர்ந்து மடு தேவாலயம் நோக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அரச படைகள் மடுதேவாலயத்தை ஆக்கிரமித்தனர்.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

மடுதேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கண்ட இராணுவத்தினர் அவர்களை அங்கிருக்குமாறே சொல்லினர். மக்கள் அங்கு தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் பண்டிவிரிச்சானில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு அறிவித்திருக்கக்கூடும்.

ஆலய வளாகத்தில் வசித்த மக்களை ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு இராணுவத்தினர் கூறியிருந்தனர். இதனை நம்பி மக்களும் ஆலய மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர். 20இற்கு மேற்பட்ட கவச வாகனங்கள். எறிகணைகள் வந்து குவியத் தொடங்கின.

துப்பாக்கிப் பிரயோகங்கள் இன்னொரு புறத்தில் சூழ்ந்தன. அன்றிரவு ஒன்பது மணிக்குப் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவத் தளத்தில் இருந்தும் செல்கள் வந்து வீழத் துவங்கின. இரவு பதினொரு மணியாக இருந்தது.

அப்பொழுதில் மக்கள்மீது பீரங்கிகள் திரும்பின. குண்டுகள் மழையாய் பொழிந்தன. மக்கள் செய்வதறியாது துடித்தனர். காப்பாற்றுமாறு மாதாவை இறைஞ்சித் துடிதுடித்தனர்.

நிர்க்கதியான மாதாவும் மக்களின் துயர் துடைக்க முடியாத நிலையில் தவித்தாள்.

வீழ்ந்தது மடு

போர் உக்கிரமாயிற்று. இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம்மீது வீழ்ந்து வெடித்தது.

ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரை காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்து ஒருபேர் அவ் இடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர்.

13 சிறுவர்கள் உள்ளடங்க எல்லாமாக 44பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

தொடர்ந்து தாக்குதல்களை இராணுவத்தினர் விரிவுபடுத்தினர். அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை அரச படைகள் கைப்பற்றியிருந்தன. வீழ்ந்தது மடு. வீழ்த்தப்பட்டாள் மடு மாதா. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எப்போதும் போர் அறத்துடனே செயற்பட்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் மடுப் பிரதேசத்தை மக்களின் நம்பிக்கையின் பொருட்டு போர் தவிர்ப்பு வலயமாகவும் புனித பிரதேசமாகவும் மதித்து வந்தனர்.

புலிகளற்ற மடு தேவாலயத்தில் நிராயுத பாணியாக தனித்திருந்த மக்களையே இராணுவத்தின் படுகொலை செய்தனர்.

ஒருவேளை அங்கு விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் தம் உறவுகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

போர் தவிர்ப்பு வலயமாக நடைமுறைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தமது நடமாட்டத்தை தவிர்த்த தேவாலயப் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் பெரும் இராணுவ வெற்றியாக அதை சித்திரித்தனர்.

தெய்வங்கள் மீது தொடுத்த போரின் சாபங்கள் தீருமா..! | Srilanka Tamil Sinhala Issue Buddhism Genocides

அத்துடன் அன்றைய சூழலில் தேர்தலில் மடுமாதாவை வீழ்த்திய செய்தியை சந்திரிக்கா வெற்றிச் செய்தியாக பயன்படுத்தினார்.

இத்தனைக்குப் பிறகும்கூட, தெய்வங்கள்மீதான போரும் பாரபட்சமும் இலங்கைத் தீவில் குறையாமல் இருப்பதுதான் இன்னமும் வேதனை தருகின்ற விடயம்.

இன்றைக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்களை ஆக்கிரமிக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்றும் அதன் வரலாற்றை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் மேற்கொள்ளப்படுகின்ற முனைப்புக்கள் பயங்கரமாக நீள்கின்றன.

அரசும் அதன் அமைச்சர்களும் திணைக்களங்களும் பேரினவாதிகளும் இராணுவமும் பலமுனைகளில் இப்போரைச் செய்கிறது. இப்படி எல்லாம் செய்துகொண்டு தெய்வ நிந்தனைகளை அறுவடை செய்து நிரப்பிக் கொண்டால் மீள முடியாத சூழலில்தானே அரசாட்சிகள் புதையும்?

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026