சேலைக்கு பதிலாக வேறு உடைகளில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்
நாட்டில் பல பாடசாலைகளின் ஆசிரியைகள் இன்று சேலைக்கு பதிலாக வேறு சாதாரண உடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.
அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டிருந்த சுற்றறிக்கைக்கு அமைய ஆசிரியைகளுக்கும் சேலைக்கு பதிலாக வேறு பொருத்தமான ஆடையில் பாடசாலைக்கு செல்ல இடமளிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், கல்வியமைச்சிடம் இதற்கு முன்னர் கோரிக்கை முன்வைத்திருந்தது.
இந்த சுற்றறிக்கைக்கு அமைய நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், போக்குவரத்து சிரமங்கள் போன்ற காரணமாக சேலைகளை அணிந்து வேலைக்கு செல்வது சிரமம் என்றும் அரச ஊழியர்களுக்கு பொருத்தமான உடையை அணிந்து கடமைக்கு செல்ல முடியும் என அரச நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதால், தாம் வேறு சாதாரண உடைகளில் கடமைக்கு சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எதிர்ப்பு
தற்போது நிலவும் பொருளாதார பணவீக்கம் காரணமாக சேலைகளின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஆசிரியைகள் தங்களின் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு பௌத்த சங்க சபையினர் உட்பட சில தரப்பினரால் எதிர்ப்புகள் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.