கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே..! காவல்துறை மா அதிபர் விடுத்த அறிவுறுத்தல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இருவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் (TID) ஒப்படைக்குமாறு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஓகஸ்ட் 18 ஆம் திகதி கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போது வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணதிலக்க உட்பட 19 பேரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
90 நாட்களுக்கு தடுத்து வைக்க அனுமதி
இவர்களில் 16 பேரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
வசந்த முதலிகே மாற்றும் ஏனைய இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
பின்னர் அவர்கள் மூவரையும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.