வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : புறப்பட்டது விசேட விமானம்

SriLankan Airlines Bandaranaike International Airport Singapore Indonesia
By Sathangani Jun 06, 2025 09:49 AM GMT
Report

புதிய இணைப்பு

சிறிலங்கன் எயார்லைன்ஸின் UL 306 என்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் சர்வதேச விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதில் பயணித்த 101 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிலுள்ள மேடான் சர்வதேச விமான நிலையத்திற்கு UL 302 என்ற விசேட நிவாரண விமானம் இவ்வாறு புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கட்டுநாயக்காவிலிருந்து (Katunayake) சிங்கப்பூர் (Singapore) நோக்கி நேற்று (05) மாலை புறப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவில் (Indonesia) அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானம் இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நமு சர்வதேச விமான நிலையத்தில் (Kuala Namu International Airport in Medan) தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புறப்படவுள்ள மற்றொரு விமானம்

எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மறுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், இலங்கைத் தூதரின் தலையீட்டால் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : புறப்பட்டது விசேட விமானம் | Srilankan Airlines Flight Makes Emergency Landing

இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சிறிலங்கன் விமானத்தைப் பரிசோதிக்க இலங்கை தொழில்நுட்பக் குழு ஒன்று இன்று (06) காலை ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகளை மீண்டும் அனுப்புவதற்காக இன்று மதியம் 1:45 மணிக்கு மற்றொரு விமானம் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகளின் ஆயுதங்கள்: அர்ச்சுனாவின் அறிக்கைக்கு அரசாங்கம் பதில்

விடுதலை புலிகளின் ஆயுதங்கள்: அர்ச்சுனாவின் அறிக்கைக்கு அரசாங்கம் பதில்

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்

விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள் : அரசுக்கு செல்வம் எம்.பி. அழுத்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்