சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்
கொரியாவில் வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்பதிவு செய்த சிறிலங்கன் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால் அவர்களது வேலைக் கனவுகள் கலைந்து அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் இந்த 100 பணியாளர்களும் நேற்று முன்தினம் இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்தனர்.
விமானம் திடீரென தாமதமானதால் விமான நிலையத்தில் கடும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு இறுதியாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் திரும்பிச் சென்றுள்ளனர்.
அனுமதிக்கப்படாத 6 பேர்
இக்குழுவினரை குறித்த நேரத்தில் அனுப்ப முடியாத காரணத்தினால், எதிர்வரும் 3ஆம் திகதி வரை இந்தக் குழுவை கொரியாவுக்கு அனுப்ப வேண்டாம் என கொரியாவின் மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளது.
அத்துடன், 100 பேர் கொண்ட குழுவில் ஆறு பேர் கொரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனின் அப்போது அந்த 6 பேரும் நிர்ணயிக்கப்பட்ட வயதை கடந்தவர்களாக இருப்பார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி யு.எல். 470 விமானம் 12 மணி நேரம் தாமதமாக வந்ததால், கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டும் மே மாதம் 23 ஆம் திகதி, கொரியாவிற்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லவிருந்த விமானம் தாமதமானதால், இலங்கையர்கள் கொரியாவிற்கு ஏற்றுக்கொள்ள மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |