1.8 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 01முதல் ஒக்டோபர் 22 வரை மொத்தமாக 1,813,484 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 22 வரை 119,805 சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பதிவாகியுள்ளது.
இந்தியா முதலிடத்தில்
இவ் வருடத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 482,944 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

அடுத்ததாக, 169,405 சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் 120,980 சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்தும் 102,920 சுற்றுலாப் பயணிகள் ஜெர்மனியிலிருந்தும் வருகை தந்துள்ளனர்.
அதன்படி, இந்தியா அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |