வெடுக்குநாறிமலை விவகாரத்தில் மிலேச்சத்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்! சிறீதரன் ஆதங்கம்
இலங்கைத்தீவின் தேசியதினங்களில் ஒன்றான தமிழினத்தின் பூர்வீக நிலங்களின் மீது தொடரும் ஆக்கிரமிப்பின் ஆகப்பிந்திய வெளிப்பாடாக வெடுக்குநாறிமலை விடயம் நடந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (20) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு வணக்கமுறையை தடுத்து நிறுத்தி அவர்களுக்கான செயல்பாடுகளை நிறுத்துவதில் இந்த அரசும் மிலேச்சதனமான நடந்துகொண்ட காவல்துறையினரின் அடாவடித்தனங்களும் இந்த உயர்ந்த சபையினூடாக கண்டிக்கதக்கதாகும்.
வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற அநியாயமான கைதுகள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எழுத்து மூலமான கடிதங்களை வழங்கியுள்ளேன்.
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இதை பேரினவாதத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |