இஸ்ரேல் தலைநகரில் பயங்கரம் : கத்திகுத்து தாக்குதலில் பெண் எல்லை காவல்படை அதிகாரி பலி
Israel
Israel-Hamas War
By Sumithiran
ஜெருசலேமின் பழைய நகரத்தில் திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் எல்லைக் காவல் அதிகாரியான பெண் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்று இஸ்ரேல் காவல்துறை உறுதிப்படுத்தியது.
இவ்வாறு கொல்லப்பட்டவர், சார்ஜன்ட் ரோஸ் ஐடா லுபின் (20) என்பவராவார். தாக்குதலைத் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். மற்ற அதிகாரி காயமடைந்தார்.
இஸ்ரேல் தலைநகரில்
இஸ்ரேல் தலைநகரில் உள்ள காவல் நிலையம் அருகே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
16 வயதுடைய தாக்குதல்தாரி சுட்டுக்கொலை
இஸ்ஸாவியாவின் கிழக்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பயங்கரவாதி, தாக்குதல் நடந்த இடத்தில் அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்திய நபருக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி