சிறிலங்கா கடற்படையினரிடம் சிக்கிய 15 தமிழக கடற்றொழிலாளர்கள் - உடன் விடுவிக்குமாறு ஸ்டாலின் கடிதம்

M. K. Stalin Dr. S. Jaishankar Tamil nadu India Sri Lanka Navy
By Mathu Jul 11, 2023 05:21 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களையும், அவர்களது உடைமைகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர்  கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 கடற்றொழிலாளர்கள் நேற்றுமுன்தினம்(9) சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா கடற்படையினரிடம் சிக்கிய 15 தமிழக கடற்றொழிலாளர்கள் - உடன் விடுவிக்குமாறு ஸ்டாலின் கடிதம் | Stalin Letter Sri Lankan Navy

“இந்தச் சம்பவம் தமிழ் நாட்டில் உள்ள கடற்றொழிலாளர் சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய - இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இதை தாம் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள்.

கடற்றொழிலாளர்கள் தமது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சிறிலங்கா கடற்படையினரால் இது போன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது கடற்றொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

தூதரக நடவடிக்கை

சிறிலங்கா கடற்படையினரிடம் சிக்கிய 15 தமிழக கடற்றொழிலாளர்கள் - உடன் விடுவிக்குமாறு ஸ்டாலின் கடிதம் | Stalin Letter Sri Lankan Navy

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளையும்  திரும்ப ஒப்படைக்கவும் இந்தியா மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் கடற்றொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும்,  சுமூகமான தீர்வினை எய்திடவும் இயலும்.

எனவே இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்”  என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025