இந்திய கடற்தொழிலாளர்களை விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்
சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன,
மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
"கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கடற்தொழிலாளர்கள், சிறிலங்கா கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
IND-TN-10-MM- 1061 IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண் கொண்ட மீன்பிடிப் படகுகளில் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் நேற்று முன்தினம் (06) கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

அதனால்,சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப்புப் படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
அதுமாத்திரமன்றி, சிறிலங்கா கடற்படையினர் ஏற்கனவே பறிமுதல் செய்து வைத்துள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்." என அவர் தெரிவித்திருந்தார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்