ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு (படம்)
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
SL Protest
By Sumithiran
விளக்கமறியல்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம்
நீதிமன்ற உத்தரவை மீறி கடந்த மே மாதம் 28ஆம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
