உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : வெளிவரும் அதிர்ச்சி தகவல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரச புலனாய்வுப் பிரிவினர் தவறாக வழிநடத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர(Shani Abeysekera), 21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் மீது பழி போட்ட இராணுவ புலனாய்வுப்பரிவு
2018 ஆம் ஆண்டு வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சியையும் அபேசேகர நினைவு கூர்ந்தார்.

வவுணதீவு படுகொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அப்போதே ஆலோசனை வழங்கியதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் இரண்டு காவல்துறையினரின் கொலையும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது அல்ல, சஹரான் ஹாசிமுடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது என்று அபேசேகர கூறினார்.
விசாரணை நடுவே இடம்மாற்றிய கோட்டாபய
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(gotabaya) தாம் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், தனது சார்பில் நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு, குறிப்பாக பிரபல சட்டத்தரணி விரான் கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான தற்போதைய நிர்வாகம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நீதியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக அபேசேகர தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்