மொட்டு கட்சியின் கடும் அழுத்தம் - அதிபர் ரணில் எடுத்துள்ள முடிவு
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
President of Sri lanka
By Sumithiran
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்
நாளை நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாம் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படாவிட்டால் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என மொட்டு உறுப்பினர்கள் அதிபருக்கு கொடுத்த கடும் அழுத்தமே இதற்கு காரணம் என அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ரணிலின் தீர்மானம்
நேற்று அதிபரை சந்தித்த மொட்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு மீண்டும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
இதன்படி நாளை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் இந்த அரச அமைச்சுப் பதவிகளை வழங்க அதிபர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி