தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டுபோகும் சம்பந்தர்!!
எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குதோ அங்கெல்லாம் விடுதலைப் புலிகள் பற்றி ஏதாவது எசகுபிசகா உளறித்தள்ளி மாட்டிக்கொண்டு முழிப்பதில் தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டைக்கு நிகர் அவரேதான்.
போராட்ட அமைப்புக்களை ‘ஆயுதக் குழுக்கள்’ எண்டு அவர் சொல்லப்போக, ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்ட விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் பைல் கட்டை சுமக்கமுடியாமல் சுமந்துகொண்டுசெல்லும் சம்பந்தரின் படத்தை எடுத்து 'வைரலாக்கி' வருகின்றார்கள் நெட்டிசன்கள்.
தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழையும்போதும் சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எண்டு தன்னைத்தானே கூறிக்கொண்டு சுற்றிவந்தபோதும் சரி, ஆயுதம் தூக்கிய பல போராட்ட அமைப்புக்கள் கூட்டமைப்பிற்குள் இருந்தன.
அண்மையில் டெலோ வெளியேறும்வரை சுமார் 12 வருசங்கள், முன்னாள் ஆயுதக்குழுக்களுடன்தான் தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டை குடும்பம் நடத்தினவர்.
அந்தக் காலத்தில ஆயுதப் போராட்டத்தை தமிழரசுக்கட்சி எப்படி ஊக்குவித்தது என்று பல உதாரணங்களை வரிசைப்படுத்திவருகின்றார்கள் நெட்டிசன்கள்.
- தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்களே அமிர்தலிங்கமும் தமிழரசுக்கட்சியும்தானே.
- துரையப்பாவை துரோகி என்று கூறி முதல் முதலாக துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்களும் தமிழரசுக்கட்சியினர்தானே!
- பொத்துவில் கனகரத்தினம் கட்சி மாறியபோது 'அவருக்கு இயற்கை மரணம் வராது' என்று பாராளுமன்றத்தில் பேசியவர் அமிர்தலிங்கம்தானே!
- அருளம்பலம், தியாகராசா போன்றவர்களையெல்லாம் துரோகிகள் என்று கூறி சுடவைத்துவிட்டு இன்று நீங்கள் நல்லவர்கள். சுட்டவர்கள் ஆயுதக் குழுக்களா?
- 'சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைத்து போடுவோம்' என உணர்ச்சிப் பேச்சு பேசி இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் தமிழரசுக்கட்சியினர்தானே!
- இப்போது தமிழரசுக்கட்சி சுத்தமான கட்சி. ஆனால் தமிழரசுக்கட்சியின் சொல்லைக் கேட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதக் குழுக்களா?
சரி அதை விடுங்கோ. உங்கட தமிழரசுக் கட்சியின் எம்பி ஒருவர் கிங்ஸ்லி ராசநாயகத்த போட்டுத்தள்ளிப்போட்டுத்தான் பதவியைப் பிடிச்சவர் என்ற கதை உங்கள் காதுகளுக்கு வரவில்லையோ?
திருகோணமலையிலயும் ஒரு முக்கியஸ்தரப் போட்டுத்தள்ளிப்போட்டுத்தான் மற்றொருவர் பதவியைப் பிடிச்சதாகவும் கிட்டடியிலதான் செய்திவந்தது.
முந்திரிக்கொட்டையாரே தமிழரசுக்கட்சியும் கிட்டத்தட்ட ஒரு வன்முறைக்ட்சிதான். கெதியா கட்சியை விட்டு வெளியேறுங்கோ.
மாவை ஐயாவுக்கு கொஞ்சம் ‘பிரசர்’ குறையட்டும்.