மாவை சேனாதிராஜாவிற்கு யாழில் திருவுருவச் சிலை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கே.கே.எஸ் வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு முன்பாக குறித்த திருவுருவச் சிலை இன்று (31.01.2026) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா கடந்த வருடம் (2025) ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
திறந்து வைக்கப்பட்ட சிலை
இந்தநிலையில் அவரது சொந்த இடமான மாவிட்டபுரத்தில் அவரின் நினைவாக திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |


இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்