பெண்ணிடம் தங்கச்சங்கிலி கொள்ளை - காவல்துறை உத்தியோகத்தரை மடக்கிப் பிடித்த பொது மக்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kiruththikan
பெண் ஒருவரிடம் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பொது மக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று மஹவஸ்கடுவ பகுதியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பதுரலிய காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு வழிபறியில் ஈடுபட்டுள்ளார்.
பொது மக்கள் நடவடிக்கை
இந்த நிலையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தரை களுத்துறை வடக்கு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பொது மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி