நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான உணவின் விலை அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் உணவு உண்ணும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வசூலிக்கும் தொகையை மேலும் அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து காலை உணவுக்கு 100 ரூபாயும், மதியம் 300 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது அந்தத் தொகை போதாது என, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்களின் விடுமுறை
அத்தோடு, நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்நது.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்ததாக அரசாங்க தகவல்கள் குறிப்பிட்டன.
நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்தினால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியிரந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |