இலங்கை - ஹங்கேரி அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தம்: விளையாட்டுதுறையில் மாற்றம்
Sri Lanka
Harin Fernando
Hungary
Sports
By Shalini Balachandran
இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, விளையாட்டு மற்றும் விளையாட்டு கல்வி போன்ற துறைகளை ஊக்குவித்து இருதரப்பினர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்கும் மற்றும் வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது நேற்று(19) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக் கல்வி
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும், குறித்த ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்