யாழில் கடமையாற்றும் விசேட அதிரடிப்படைவீரர் கொழும்பில் கைது
190 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படைவீரர் ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாளிகாவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று இரவு குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை
மாளிகாவத்தை கோவிலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையின் போது அவர் யாழ்ப்பாணம் நெல்லியடி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் எனவும் விடுமுறையில் வந்தவர் என்பதும் தெரியவந்ததாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
