திணறும் ரஷ்யா - பிரிட்டன் உளவுத்துறை வெளியிட்ட தகவல்
பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை
உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் போதுமான பொதுசேவைகளை வழங்க ரஷ்யா திணறி வருவதாக பிரித்தானிய உளவுத் துறை அறிக்கைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
நான்காவது மாதமாக தொடரும் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன.
எனினும் செவெரோடோனெட்ஸ்கைச் சுற்றி உக்ரைனிய படைகளுக்கும் ரஷ்ய படைகளுக்கும் இடையே சண்டை தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் உக்ரைனிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ரஷ்யா திணறி வருவதாகவும், பாதுகாப்பான குடிநீர், தொலைபேசி சேவை மற்றும் இணையதள சேவைகள் ஆகியவற்றை வழங்குவதில் பெரும் இடையூறு தொடர்வதாகவும் பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 10 June 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) June 10, 2022
Find out more about the UK government's response: https://t.co/eMOeSJOmbI
?? #StandWithUkraine ?? pic.twitter.com/IncUIxawpK
கொலரா தொற்று அபாயம்
மேலும் கெர்சனில் மருந்துகளுக்கான கடுமையான தட்டுப்பாடு இருக்கலாம் எனவும், மரியுபோல் நகரில் மிகப்பெரிய கொலரா தொற்று அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், மே மாத தொடகத்தில் முதல் கொலரா தொற்று தனிமைப்படுத்துதல் பதிவாகி இருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் மரியுபோலில் மருந்து சேவைகள் ஏற்கனவே சரிவை நெருங்கிவிட்டன, இந்த நிலைமை மரியுபோலில் மிகப்பெரிய கொலரா வெடிப்பை மோசமாக்கும் என எச்சரிக்கையையும் பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

