செயலாளர் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் -குழப்பத்தில் பேராசிரியர்
தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் விமர்சனங்களை முன்வைத்த போதிலும் உபவேந்தர் பதவியில் இருந்து விலகி விவசாய அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் எனினும் தற்போது தன்னை பதவி நீக்கியமைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே.திஸாநாயக்க(Prof. Udith K. Dissanayake) தெரிவித்துள்ளார்.
தொலைககாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் செயலர் பதவியை ஏற்க முடிவு செய்தபோது, நண்பர்கள் சிலர் தன்னை அழைத்து, 'இந்த குப்பைக் குவியலில் குதிக்க பைத்தியமா?' எனக் கேட்டதாகவும் முன்னாள் செயலாளர் குறிப்பிட்டார்.
தாம் செயலாளராக கடமையாற்றிய விதம் திருப்திகரமாக இருப்பதாகவும், அதனை நாட்டிலுள்ள 90% க்கும் அதிகமான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தான் கருதுவதாகவும் .ஜெயசிங்க குறிப்பிடுகின்றார்.
விவசாய அமைச்சின் செயலாளராக வேறொருவர் நியமிக்கப்படும் வரை தமக்கு அது தொடர்பில் தெரியாது எனவும் இதுவரையில் தன்னை நீக்கியமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் எழுத்து மூலம் கூட அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். இது தொடர்பாக விசாரிக்கவோ, வாதிடவோ தாம் உத்தேசிக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.