யாழில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் சாவகச்சேரி காவல்துறையினரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.
சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடப்பட்டிருந்தது.
விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்
இதையடுத்து அவர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி காவல்துறையினர் காவல் நிலையங்களுக்கும் சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் வழங்கினார்கள்.
இதையடுத்து மன்னார் சோதனைச்சாவடியில் வைத்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளைத் திருடியவரும் கைதுசெய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி