உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை -ரஷ்யாவில் டாங்கிகளின் உற்பத்தி நிறுத்தம்(photo)
ரஷ்ய பிராந்தியமான செலியாபின்ஸ்க்கில், ரஷ்யாவுக்கு இராணுவ டாங்கிகளை உற்பத்தி செய்யும், பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்று, இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, உக்ரைன் இராணுவம் தன் முகநூல் பதிவில், ரஷ்ய உற்பத்தி நிறுவனமான உரல்வகோன்ஸவோட், “இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை காரணமாக” உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு டாங்கிகளை உற்பத்தி செய்யும் ஒரே ஆலை இது என, உக்ரைன் இராணுவ தகவல் மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.
மேலும், அந்த ஆலை உற்பத்திக்காக மேற்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களையே தொடர்ந்து பயன்படுத்துவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை உற்பத்தியை நிறுத்தியது தொடர்பாக, ரஷ்ய ஊடகங்களில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
What do you know - sanctions DO work, if you actually put some effort into them. https://t.co/unHCEG10Wn
— Euan MacDonald (@Euan_MacDonald) March 22, 2022
