தமிழர் பகுதியில் மதப்பதற்றம் மிகு சூழல் - உடன் தடுக்க ரணிலிடம் கோரிக்கை

Kilinochchi Ranil Wickremesinghe Buddhism
By Vanan May 15, 2023 08:12 AM GMT
Report

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் மதப்பதற்றம் மிகு சூழலொன்று ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. எனவே அதனை உடனடியாக தடுத்துநிறுத்துமாறு ஆலயத்தின் அறங்காவலர் சபையினர் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அதிபரின் உப அலுவலகத்திற்கு இன்று விஜயம் செய்த அறங்காவலர் சபையினர் அதிபருக்கு அனுப்பும் வண்ணம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

“ எமது ஆலய வளாகத்தில் தொல்பொருட் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நில அளவை செய்யப்படவுள்ளதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நில அளவை செய்வதற்கான கடிதம்

தமிழர் பகுதியில் மதப்பதற்றம் மிகு சூழல் - உடன் தடுக்க ரணிலிடம் கோரிக்கை | Stop Segregation Request To The President

இதற்கமைய, எமது ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்பொருள் சின்னம் அமைந்துள்ள நிலப்பரப்பினை எல்லைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 2023.05.18ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்செயற்பாட்டுக்கு நாம் எமது முழுமையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறோம்.

ஏற்கனவே, கடந்த 2021.03.22ஆம் திகதி அளவீட்டுப்பணிகளை மேற்கொள்வதற்காக வருகைதந்த தொல்பொருளியல் திணைக்களத்தினர், மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஆலய வளாகத்தினுள் உள்நுழையமுடியாதவாறு வெளியேற்றப்பட்டிருந்ததையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

இன, மத வேறுபாடுகளற்று தொல்பொருள் சின்னங்களையும் அவற்றின் தொன்மையையும் பாதுகாக்க வேண்டிய தொல்பொருளியல் திணைக்களம் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் இனத்துவ ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருவதாலும், அத்திணைக்களத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகளாலும், அதனை எதிர்க்கவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சதுர ஆவுடையார் கொண்ட சிவலிங்கத்தை உடைய ஒரேயொரு சிவாலயம் என்னும் பெருமையையும், 2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையையும் கொண்டது எமது ஆலயம்.

அதன் பூசை மரபுகளும், வழிபாடுகளும் மிக இயல்பாக நடைபெற்று வரும் சூழலில், தொல்பொருளியல் திணைக்களத்தின் தலையீட்டினால் எமது மண்ணிலோ, இயல்பான இயங்கு நிலையிலுள்ள எமது ஆலயச்சூழலிலோ மதப்பதற்றம் மிகு சூழலொன்று ஏற்படுவதை நாமோ எமது மாவட்ட மக்களோ விரும்பவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழி

தமிழர் பகுதியில் மதப்பதற்றம் மிகு சூழல் - உடன் தடுக்க ரணிலிடம் கோரிக்கை | Stop Segregation Request To The President

எனவே இவ்விடயத்தில் உயரிய கரிசனைகொண்டு, தொல்பொருளியல் திணைக்களத்தின் இத்தகையை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதாக வடக்கு கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023.05.11ஆம் திகதி தாங்கள் வழங்கிய உறுதிமொழியை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

அதற்கமைய, எமது ஆலயத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளையும் அதனோடு தொடர்புடைய அகழ்வுப் பணிகளையும் தங்களின் நேரடித் தலையீட்டினால் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தி , எமது இருப்பையும் இயங்குநிலையையும், ஆலயத்தின் புனிதத்தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்” - என்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022