ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை...! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
United States of America
Israel
Iran
World
Strait of Hormuz
By Shalini Balachandran
உலக அளவில் மிக முக்கிய நீர் வழிப்பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz), ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அந்த நீர் வழிப்பாதையின் வழியாகக் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் பொருட்டு அமெரிக்கப் படைகள் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுக்கு எதிர்ப்பு
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த பின்னணியில் அமெரிக்காவின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்