வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்கக் கோரி போராட்டம்
Vavuniya
SL Protest
By Vanan
வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடிச் சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பைக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
போலி முகவர்களின் செயற்பாடு

இதன்போது மத்திய கிழக்கு நாடுகளும் தொழிலுக்காகச் சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதுடன் போலி முகவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
