அனைத்து துன்புறுத்தல்களையும் குற்றமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி
அனைத்து வகையான தவறான துன்புறுத்தல்களையும் குற்றமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் (Wijeyadasa Rajapakshe) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல்
இதன்படி, பொது இடங்களில் தவறான துன்புறுத்தல் மற்றும் தவறான முறைக்கு உட்படுத்தப்படல் உட்பட அனைத்து வகையான துன்புறுத்தல்களை குற்றமாக மாற்றி 2022 ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |