நாளை முதல் பணிப்புறக்கணிப்பு: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை
நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு
இன்றைய தினம் முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் அஞ்சன பிரியன்ஜித் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழைய விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களை இலங்கை போக்குவரத்துச் சபை நிலையங்கள் தனியார் பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் விற்பனை செய்கின்றன எனவும் சுட்டிக் காட்டினார்.
35 வீதத்தினால் கட்டண உயர்வு
எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும்.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஆண்டு கட்டண அதிகரிப்பு என்பனவற்றை உள்ளடக்கி பேருந்து கட்டணங்கள் 35 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாளை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது.
அடிக்கடி எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அரசாங்கம் மக்களுடன் விளையாடி வருகிறது. இது என்றாவது வினையாகும் எனவும் தெரிவித்தார்
