25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

Tsunami Japan Taiwan Earthquake
By Kathirpriya Apr 03, 2024 06:55 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

புதிய இணைப்பு  

இன்று (03) அதிகாலை தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்த்தின் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு | Strong Earthquake Hits Taiwan Tsunami Alert Issued

அதுமாத்திரமன்றி இதுவரை இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 50 பேர் வரை காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 25 முறை நிலஅதிர்வுகள் பதிவானது, இதனால் மக்கள் பெரும் அச்சம் கொண்ட நிலையில் அந்த நகரிலுள்ள கட்டடங்களும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில் அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள், அங்குள்ள 80 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  

இரண்டாம் இணைப்பு

கடந்த 25 ஆண்டுகளில் தாய்வான் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள தீவுப்பகுதிகளில் தாக்கப்பட்ட மிக வலுவான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு | Strong Earthquake Hits Taiwan Tsunami Alert Issued

இந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தாய்வானின் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், தாரோகோ தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பாதையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாலியனுக்கு வெளியே உள்ள ஒரு முக்கிய பள்ளத்தாக்கின் பெயரால் இந்த பூங்காவிற்கு பெயரிடப்பட்டுள்ளது, தவிரவும் ஹுவாலியனில் உள்ள சுரங்கப் பாதையில் பலர் சிக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முதலாம் இணைப்பு  

தாய்வான் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை (03) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தாய்வான் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

33 ஆண்டுகால அரசியல் பயணம் : இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன்சிங்

33 ஆண்டுகால அரசியல் பயணம் : இன்றுடன் ஓய்வு பெறுகிறார் மன்மோகன்சிங்

கடுமையான நிலநடுக்கம்

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், தாய்வானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு | Strong Earthquake Hits Taiwan Tsunami Alert Issued

அதேபோல் தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிமீ (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருமானம் அதிகரிக்கும் : அதிஷ்டத்தால் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான் : இன்றைய ராசி பலன்

வருமானம் அதிகரிக்கும் : அதிஷ்டத்தால் மூழ்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான் : இன்றைய ராசி பலன்

பலர் காணாமல் போயுள்ளனர்

இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டில் உள்ள தீவுகளையும் தாக்கியுள்ளது, ஜப்பான் நாட்டின் மியாகோ மற்றும் யாயியாமா தீவுகளை முதல் அலை தாக்கியதாக நம்பப்படுகிறது.

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு | Strong Earthquake Hits Taiwan Tsunami Alert Issued

இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கச்சதீவு பற்றி பேச பா.ஜ. கவிற்கு எந்த தகுதியுமில்லை என விமர்சனம்

கச்சதீவு பற்றி பேச பா.ஜ. கவிற்கு எந்த தகுதியுமில்லை என விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024