இலங்கையில் அதிகரித்து வரும் போலி வைத்தியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இலங்கையில் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவியவருகையில், போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மருத்துவ நிறுவனங்கள்
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பல இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறான வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை உடனடியாக விசாரணை செய்யுமாறு மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இவ்வாறான நிறுவனங்கள் மற்றும் வைத்தியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |