ரணிலை விரட்டும்வரை போராட்டம் ஓயாது - காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சபதம்
போராட்டம் முடிவுக்கு வரவில்லை
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தமது போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த் முதலிகே இதனை தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்களின் தியாகம்
மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாலையில் தப்பிப்பதற்கும் காரணமான எதிர்ப்பாளர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புகளை முதலிகே நினைவு கூர்ந்தார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற சதிப்புரட்சியை அடுத்து ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 6.9 மில்லியன் ஆணை இழக்கப்பட்டது, அதிபர் தப்பி ஓட வேண்டியிருந்தது.
ஆனால் அந்த முரட்டுத்தனமான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி, ரணில் விக்கிரமசிங்க அதிபராக அமர்த்தப்பட்டார், மேலும் ரணிலை அகற்றுவதற்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடங்குவோம் எனத் தெரிவித்தார்.
