புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
Grade 05 Scholarship examination
Sri Lanka Police Investigation
By Sumithiran
மொரகஹஹேன, மில்லாவ பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வயரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி ஒன்பது வயது சிறுமி இன்று (11) மாலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மில்லாவ, தம்மானந்த மாவத்தையில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஆவார்.
அவர் இந்த வருடம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தார். அத்துடன் வட்டரேகா ஜூனியர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியாவார்.
மின்சார சபை அதிகாரிகள்
சம்பந்தப்பட்ட வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஒரு ஹோல்டரிலிருந்து மின் இணைப்பு பெறப்பட்டதாகவும், வீட்டின் ஏத் வயர் உடைந்து தரையுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில் மின்சார இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படவில்லை என்றும் மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில்,தெரியவந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி