பாடசாலையில் திடீரென மயங்கி வீழ்ந்த மாணவி உயிரிழப்பு : தமிழர் பகுதியில் துயரம்
மட்டக்களப்பு (Batticaloa) - கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (25) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிரான்குளம் 8ஆம் பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.தர சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை
கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி வழமைபோல இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
