உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட விரக்தி - விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம் (படம்)
இரண்டு வருட காதலால் விரக்தியடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது பாட்டியின் மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கம்பளை கறுவாத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹசினிகா பன்னரபோதனி மாரசிங்க எனவும், மீத்தலாவ பகுதியில் வசிப்பவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளார்.மாணவியின் தந்தையின் நண்பரான மகனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.தந்தையின் நண்பர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள நண்பரின் நட்பு காரணமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் கம்பளை, மீத்தலாவ பிரதேசத்தில் உள்ள தமது வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம் என ஹசினிகாவின் தந்தை நிஷாந்த மாரசிங்க தெரிவித்துள்ளார். அப்போது நண்பரின் மகன் தனது மகளுடன் இந்த நட்பை வளர்த்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் அந்த மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் தனது காதலனுக்கு வேறு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு தனது காதலனிடமிருந்தும் மிரட்டல்கள் வந்ததாகவும், தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் தந்தை தெரிவித்தார். இதனையடுத்து மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல், பாட்டிக்கு இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றுக்கு வாங்கி வைத்திருந்த மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன், மாத்திரையை அதிகமாக உட்கொண்டமையினால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.

