உயர்தர மாணவி திடீரென உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (10.11.2025) இரவு தம்புள்ளை, இஹல எரவுல இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார்.
கண்விழிக்காத காரணம்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவி, இரவு உறங்கிய பின்னர் காலை கண்விழிக்காத காரணத்தினால் பெற்றோர் அவரைப் பரிசோதித்த போது, அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் குறித்த மாணவியை தம்புள்ளை ஆதார மருத்துவமனை அனுமதித்துள்ளனர்.
வைத்தியர்கள் அவரைப் பரிசோதித்தபோது, வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
நேற்று தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

அவர் விஷம் அருந்தி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |