மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் கல்விக்கு முற்றுப்புள்ளி - கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை
ருகுனு கல்வி பீடத்தில் இடம்பெற்ற மாணவர் மோதலில் ஈடுபட்ட 54 மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோதல் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய கல்லூரி ஆணையாளர் ரஞ்சித் சந்தசேகர மேற்கூறியவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
விசாரணை
அத்துடன், மாணவர் மோதல் தொடர்பில் ருகுனு கல்வி பீடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. நவம்பர் 26 அன்று, ருகுனு கல்வி பீடத்தின் இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது.
இதில் காயமடைந்த 12 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆசிரியர் கல்வியில் ஈடுபடும் மாணவர்களின் ஒழுக்கத்தை பேணுவதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை கல்வி அமைச்சு பின்பற்றி வருவதாக கல்லூரி ஆணையாளர் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
