நண்பனுடன் சேர்ந்து அருந்துவதற்காக சாராய போத்தலுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்..!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
சிலாபம் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர் தனது பாடப்புத்தக பொதியில் சாராய போத்தல் ஒன்றை மறைத்து கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
9 ஆம் ஆண்டில் பயிலும் இந்த மாணவன் பாடசாலையில் பிரதான நுழைவு வாயில் ஊடாக பாடசாலைக்கு சென்ற போது, அங்கிருந்த மாணவ தலைவர்கள் அவது புத்தக பொதியை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது அதில் ஒரு போத்தல் சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவ தலைவர்கள் மாணவனை சாராய போத்தலுடன் அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனது தந்தை வீட்டுக்கு கொண்டு வந்திருந்த விஸ்கி போத்தலை நண்பனுடன் சேர்ந்த அருந்துவதற்காக கொண்டு வந்ததாக மாணவன் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவனை கடுமையாக எச்சரித்துள்ள அதிபர், இது குறித்து அவரது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி