கொழும்பு - காலி முகத்திடல் கடலில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்
Colombo
Sri Lanka Police Investigation
schools
By Dharu
கொழும்பு - காலி முகத்திடல் கடலில் நீராட சென்ற மூன்று மாணவர்கள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (10.06.2026) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரிய வருகையில், “ மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
கவலைக்கிடமான நிலை
6 பேரடங்கிய குழுவொன்று இவ்வாறு காலிமுகத்திடல் கடலில் இறங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. அவர்களில் மூவரே இவ்வாறு அலைகளில் சிக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், இதில் இருவர் மீட்க்கப்பட்டுள்ளதாகவும், இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காணாமல் போனவரை தேடி கடற்படை சுழியோடிகள் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை
3ம் ஆண்டு நினைவஞ்சலி