பிரபல பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்
Colombo
Sri Lanka Police Investigation
School Incident
By Sumithiran
கொழும்பிலுள்ள பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்தியமை அம்பலமாகியுள்ளது.
இம் மாணவிகளில் இருவர் போதை மாத்திரைகளை மட்டக்குளிய பிரதேசத்திற்குசென்று அங்கு ஒருவரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.
கழிவறையில் போதை குளிசைகளை அருந்தும் மாணவிகள்
மேற்படி மாணவிகள் 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகளை பாடசாலையின் கழிவறைக்குச் சென்று அருந்துவது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர், மருதானை காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து முறைப்பாடு செய்துள்ளார். பாடசாலைக்கு விரைந்த காவல்துறையினர் இம் மாணவிகள் 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி