இணையவழி கற்றலில் ஈடுபடும் மாணவிகள் - இளம் குடும்பஸ்தரின் கீழ்தரமான செயல் அம்பலம்
தற்போதைய கொரோனா சூழ்நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இணைய வழி மூலமே அனைத்து கல்விச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இணையவழி கற்றலில் ஈடுபடும் பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு, தவறான புகைப்படங்களை அனுப்பிய இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிட்டிக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
பாடசாலை மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு தவறான புகைப்படங்களை அனுப்பிய பின்னர், அவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தம்மை சந்திக்கவருமாறு குறித்த நபர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மாணவி ஒருவர் தமது பெற்றோருடன் காவல் துறையினருக்கு அளித்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.