இந்தியாவில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையில் அடைத்து கொடுமைப்படுத்திய ஆசிரியர்கள்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 34 மாணவர்களை சுமார் 5 மணி நேரம் வகுப்பறையில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை கட்டணம் செலுத்த தவறியமையால் அவர்களை இவ்வாறு வகுப்பறையில் ஆசிரியர்கள் அடைத்து வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சாப்பிடவோ நீர் அருந்தவோ அனுமதிக்கவில்லை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது, பாடசாலைக் கட்டணம் செலுத்தாததால் அடைத்து வைத்திருப்பதாக அந்த மாணவர்களிடம் தெரிவித்த நிர்வாகிகள், அவர்கள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவும் அனுமதி மறுத்துவிட்டனர்.
சுமார் 5 மணி நேரம் அவர்களை சாப்பிடவோ, நீர் அருந்தவோ, கழிப்பறை செல்லவோ கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
5 மணி நேரம் கழிந்த நிலையில், கட்டணம் செலுத்தாதது நோட்டீசை மாணவர்களுக்கு வழங்கி, அதை அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கொடுக்கும்படி கூறியிருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பெருமளவில் திரண்டு, பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

