கிண்ணியாவில் போதிய வசதிகள் இன்றி தவிக்கும் மாணவர்கள்
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே, இப்பாடசாலை மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு தேவையான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெற்றோர்கள் கோரிக்கை
இதன்படி, பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளை உரிய முறையில் பங்கீடு செய்து வழங்குவதுடன், பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை