சூடானில் வெகுஜன படுகொலை - ஒரே புதைகுழியில் 87 பேரின் உடல்கள்
United Nations
Death
Sudan
By Mathu
சூடானில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கார்டூம், ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையேயான மோதல் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தீவிரம் அடைந்தது.
இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வெகுஜன படுகொலை

இந்நிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை ”வெகுஜன படுகொலை” என ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்