குண்டுத் தாக்குதல்களினால் அதிரும் சூடான்..!
சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், `ஆர்எஸ்எப்' என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
அதன்படி தலைநகரான கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை ராணுவ படையினர் அறிவித்தனர்.
இதனால் கார்டூமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. பின்னர் இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
