இடப்பற்றாக்குறை - வீட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!
people
sudarshini fernandopulle
coronasri lanka
By Shalini
அறிகுறிகள் இன்றி, அபாய நிலையில் இல்லாத COVID தொற்றாளர்களை வீட்டிலே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அநேகமான பிரதான வைத்தியசாலைகளில் அபாய நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் வசதிகளுக்கு மேலதிகமான COVID நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ஒக்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அபாய நிலையை கருத்திற்கொண்டு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் ஏனையவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி