சனத் நிஷாந்தவின் திடீர் மரணம்! வெற்றிடத்திற்கு புதியவர் நியமனம்
Sri Lanka Police
Accident
Sanath Nishantha
By pavan
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதற்கமைய, ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.
வாகன விபத்து
அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என அரசியல் ஆய்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.https://www.youtube.com/watch?v=xrHWV7nMn2M
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்