இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின்தடை : சபையில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி
இலங்கையில் திடீரென மின்சாரம் தடைப்பட்டமைக்கு காரணம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) மின்சக்தி அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய (18.02.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குரங்குகள் பாணந்துறை மின்நிலையத்திற்குள் செல்வதற்கு காரணம் என்ன, குரங்குகளால் மின்சாரம் தடைப்பட்டது இது தான் நாட்டில் முதற்தடவை.
அத்துடன் மின் துண்டிப்பை மீள இணைப்பதற்கு 6 மணித்தியாலங்கள் எடுத்தமைக்கான காரணம் என்ன, இந்த மின்துண்டிப்பு எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது, அதற்கான காலவரையறை என்ன.
மின்துண்டிப்பு காரணமாக குடும்பங்களிலும் தொழில் ரீதியாகவும் ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான இழப்புக்கள் எவை? இங்கே தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்று செய்யப்பட்டதா? இது குறித்து ஏதேனும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினார்.
இதேவேளை இதற்குப் பதிலளித்த நலிந்த ஜயதிஸ்ஸ, ”குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள். மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய நாங்கள் இன்னும் விசாரணைகளை நடத்தி வருகிறோம், இந்த வாரத்திற்குள் இதற்கான பதில் வழங்கப்படும்“ என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
