வெள்ளவத்தை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 துணை மின் நிலையங்கள்
CEB
Colombo
Sri Lanka
By Beulah
வெள்ளவத்தை பகுதியில் இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு, ஹெவ்லொக் - வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 துணை மின் நிலையங்கள் மின்சார சபையின் விநியோக அமைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
மின் துண்டிப்பு

மின்சாரம் இதுதொடர்பில் தெரிவிக்கையில்,
“கேபிள் பழுதுபார்க்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
சில மின்சாரம் தடைபட்ட பகுதிகளுக்கு விநியோகத்தை மீட்டெடுக்க மின் பிறப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன.
எவ்வாறாயினும், ஹெவ்லொக் - வெள்ளவத்தை பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்