நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையின் தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
திடீர் மின் தடை
இதுபோன்ற திடீர் மின்தடை ஏற்படும் பட்சத்தில், கூடுதல் மின் உற்பத்தியை பராமரிக்க வேண்டும் என்றாலும், செலவு இல்லாததால், கூடுதல் மின் உற்பத்தியை பராமரிக்க முடியாது என, மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி நாடு முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்டது.
மின் தடைக்கான காரணம்
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின்சார பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இது இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார சபை பகுதிகளாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீரமைக்க 5 மணித்தியாலங்களுக்கு மேல் எடுத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |