ஐஎப்சி நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 400 மில்லியன் டொலர் வசதி..!
Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக சர்வதேச நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் இந்த நிதியுதவியை வழங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
மருந்து, உணவு மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி